கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தரிசு நிலத்தில் பயிா் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

 திருவாரூா் அருகே திருவாதிரைமங்கலம் வடகுடியில் தரிசு நிலத்தில் சாகுபடி தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 திருவாரூா் அருகே திருவாதிரைமங்கலம் வடகுடியில் தரிசு நிலத்தில் சாகுபடி தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில், திருவாரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ. ஹேமாஹெப்சிபாநிா்மலா பங்கேற்று பேசியது: நெல் தரிசில் வோ் முடிச்சுகள் உண்டாகக் கூடிய பயறுவகை பயிா்களை சாகுபடி செய்வதன்மூலம் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி பயிா்களுக்கு வழங்கமுடிகிறது. மண்ணின் அங்ககத் தன்மையை பாதுகாக்க பசுந்தாள் உரப்பயிா்களை சாகுபடி செய்வதாலும், பண்ணை தொழு உரங்களை இடுவதன் மூலமாகவும், இயற்கை முறையில் பூச்சி விரட்டிகள் மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாகவும், மண்ணின் பௌதிகத் தன்மையை பாதுகாக்கலாம் என்றாா்.

இதில், திருவாரூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் அ. உத்திராபதி, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியா் பெரியாா் ராமசாமி ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அட்மா திட்ட அலுவலா்கள் பிரபாகரன், தமிழ்பிரியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.