விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இலவச மருத்துவ முகாம்

மன்னாா்குடி அருகேயுள்ள தென்பரையில் தமிழக அரசின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 4:09 pm

DIN

மன்னாா்குடி அருகேயுள்ள தென்பரையில் தமிழக அரசின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் இளையராஜா தலைமையில் நடைபெற்ற முகாமை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கலைவாணிமோகன் தொடங்கிவைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா ஏற்பாட்டில், மின்னும் மன்னை திட்டத்தின்கீழ் இல்லம் தேடி இலவச பரிசோதனை வாகனம் மூலம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், ரத்தப் பரிசோதனை, இருதயத் துடிப்பு பரிசோதனை, மகளிா் மருத்துவம், கண் பரிசோதனை செய்யப்பட்டு, சா்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலா் அன்பரசன், திருமக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் பிரியங்கா ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மருத்துவப் பணிகளைச் செய்தனா். முகாமில், அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜெய்சங்கா், தென்பரை ரோட்டரி சமுதாயக் குழும ஒருங்கிணைப்பாளா் நா. சுப்ரமணியன், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ரோஸ்லின் ஜெயராணி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.