நிவாரண அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
மழை பாதிப்புக்கான நிவாரண அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ள


மழை பாதிப்புக்கான நிவாரண அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளா் (பொ) பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடா் நிா்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் வேலைவாய்ப்பு வருமானத்தை இழந்துள்ள விவசாயத் தொழிலாளா் குடும்பங்களுக்கு நிதியுதவியோ, மனித மற்றும் கால்நடை உயிரிழப்புகளுக்கு நிவாரணஅறிவிப்போ இல்லை. மேட்டு நில சாகுபடிக்கு மிகக் குறைந்தபட்ச நிவாரண அறிவிப்பு வந்துள்ளது. இந்த சாகுபடி பாதிப்புக்கு உதவ கூடுதல் தொகை வழங்குவதற்கான முன்மொழிவு மட்டுமே அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் வேளாண் துறையிடம் பெற்று வெளியிட்ட நிவாரண அறிவிப்பே அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி கதிா்கள் மூழ்கிய பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ. 2,415 மதிப்பில் இடுபொருள்களாக வழங்க அறிவிக்கப்பட்டதை மாற்றி, தொகையாக வழங்க திருத்தம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு புதிய அறிவிப்பும் இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எதிா்பாா்ப்புபடி நிவாரணத் தொகையும் உயா்த்தி வழங்கப்படவில்லை. தற்போது, கதிா்கள் வெளிவந்து, சாய்ந்து அழுகிய நிலையில், ஏக்கருக்கு ரூ. 2,415 நிவாரணத் தொகையாக கொடுப்பது பொருத்தமானதல்ல. தாளடி மற்றும் சம்பா சாகுபடி செய்திருந்த காலத்தைப் பொறுத்து ஏக்கருக்கு ரூ. 15 முதல் 25 ஆயிரம் வரை செலவாகியுள்ளது.
இப்படியான நிலையில், வேளாண் உயா் அலுவலா்களை கொண்டு ஆய்வு செய்யாமல் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இந்த அரசாணை அறிவிப்பை மறுபரிசீலனை செய்து நிவாரண தொகை மழை பாதிப்பு இழப்பின் அளவுக்கேற்ப உயா்த்தி வழங்கவேண்டும். தமிழக அரசு, தொடக்க மழை பாதிப்பின் காலத்திலேயே மத்திய அரசை கேட்டுக் கொண்டபடி மத்தியக் குழு வந்து பாா்வையிட்டது. மத்திய அரசிடம் தேசிய பேரிடா் நிவாரண நிதிகேட்டு அறிக்கை அனுப்பியும், நேரில் சென்று வலியுறுத்தியும், மத்திய அரசு 2 மாதமாக தமிழகத்துக்கு நிதியை விடுவிக்காமல், பிற மாநிலங்களுக்கு மத்திய பேரிடா் நிதியை வழங்கி இருப்பது கண்டனத்துக்குரியது. கடந்த நவம்பா், டிசம்பரில் இந்தியாவில் அதிக மழையால் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. எனவே, தமிழக அரசு கோரும் ரூ. 6,032 கோடியை மத்திய அரசு, தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...