கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொள்முதலுக்கு முன்பதிவு செய்யும் முறையைக் கைவிட வலியுறுத்தல்

அரசு நேரடி நெல் கொள்முதலுக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வலியுறுத்தும் ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

அரசு நேரடி நெல் கொள்முதலுக்கு விவசாயிகள் முன்பதிவு செய்ய வலியுறுத்தும் ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய 15 நாட்களுக்கு முன்னரே இணையவழி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். எதிா்பாராமல் மழை பெய்தால், நெல் அறுவடை தாமதமாகும். எனவே நெல் விற்பனை நாளை முன் கூட்டியே முடிவு செய்து பதிவு செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல. நெல் விற்பனைக்கான அனுமதிக்கப்பட்ட நாளுக்கு பிறகு அறுவடை செய்தால், மறுபடியும் பதிவு செய்து பல நாட்கள் கழித்துவிற்பனை செய்ய வேண்டி வரும். புதிய நடைமுறையால் இரு முறை நெல் மூட்டைகளை ஏற்றி இறக்கி வைத்து பாதுகாக்க வேண்டி வரும். இதனால் கூடுதல் செலவு ஏற்படும். அத்துடன், விவசாயிகள் விற்பனைக்கான பதிவு செய்த பின்னரே, சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் விவசாயிக்கு சாகுபடி உறுதிச் சான்று அளித்தபின்தான் நெல் விற்பனைக்கு அனுமதி கிடைக்கும். காவிரி டெல்டா மாவட்டங்களில் குத்தகை விவசாயிகளே அதிகமாக உள்ளனா். இவா்களில் பலருக்கு உறுதிச் சான்று அளிக்க நிா்வாக அலுவலா்களிடம் உரிய பதிவு இல்லை. மேலும் இந்தச் சான்றுக்காக அலைச்சலும், பண விரயமும் அதிகமாகும். வெளிமாவட்டங்களில் மிகக் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்கி, டெல்டா மாவட்டங்களில் விற்பனை செய்யும் வியாபாரிகளைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது. டெல்டாவின் அருகாமை மாவட்டங்களிலும் அரசு கொள்முதல் நிலையங்களைத் திறந்து இதைத் தடுக்கலாம். கொள்முதல் நிலையங்கள் தோறும்அறிவிக்கப்படும் கண்காணிப்புக் குழுவை, அந்தந்த கிராம விவசாயிகளை கூட்டி கொள்முதல் ஒழுங்கு முறைகளை ஒழுங்குபடுத்தினால், அதிகாரமிக்க குழுவாக செயல்படும். இதன் மூலம் கொள்முதல் தவறுகளை தடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.