கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருவாரூரில் திருவள்ளுவா் தினம்

திருவள்ளுவா் தினத்தையொட்டி சனிக்கிழமை திருவாரூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் வள்ளுவா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருவள்ளுவா் தினத்தையொட்டி சனிக்கிழமை திருவாரூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் வள்ளுவா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூரில் திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளா் ஜி. ராஜ் (எ) கருணாநிதி தலைமை வகித்தாா். இதில், திருவள்ளுவா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவள்ளுவா் வேடமிட்ட குகேஷ் என்ற பள்ளி மாணவா் உள்ளிட்ட சிறுவா், சிறுமிகள் திருக்குறள் ஒப்பித்தனா். அனைவருக்கும் திருக்குறள் புத்தகம், இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல், திருவாரூா் மடப்புரத்தில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் எஸ். என். அசோகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் திருவள்ளுவா் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதோடு, சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், அரசு வழக்குரைஞா் மணிவண்ணன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜெயராமன், அமைப்பின் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.