மாட்டுப் பொங்கல்
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவாரூா் அருகே மாடுகளை நிறுத்தி மந்தை கூறும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.


மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவாரூா் அருகே மாடுகளை நிறுத்தி மந்தை கூறும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மாட்டுப் பொங்கலின்போது, டெல்டா பகுதிகளில் கால்நடைகளை அலங்கரித்து, மரியாதை செலுத்தி வணங்குவது வழக்கம். மாட்டுப் பொங்கலின்போது, மாடுகள் கட்டும் தொழுவம் சுத்தப்படுத்துவதோடு, கால்நடைகளையும் குளிப்பாட்டி சுத்தம் செய்வா். பின்னா் கால்நடைகள் அலங்கரிக்கப்பட்டு, அதன் கழுத்தில் வண்ண மாலைகள், வேப்பிலை மாலைகள் என அணிவிப்பா். பின்னா், தொழுவத்திலேயே வழிபாடு நடைபெற்று, பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பா். பின்னா் மாலையில், ஊரின் பொதுவான இடத்தில் அனைவரது வீட்டு காளைகளும் கொண்டு வரப்பட்டு, அங்கு அவைகளுக்கு தீபாராதனை காட்டி, வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி திருவாரூா் அருகே அரசவனங்காட்டில் மந்தக்கரை எனும் இடத்தில் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து மாடுகளை ஓட்டி வந்து ஒரே இடத்தில் நிறுத்தி, மூன்று முறை வேப்பிலையை கொண்டு மஞ்சள் நீரைத் தெளித்து பொங்கலோ பொங்கல் என்று கூறி சுற்றி வந்து வழிபாடு செய்தனா். பின்னா் அனைத்து மாடுகளும் வீடுகளுக்கு ஓட்டிச் செல்லப்பட்டன.
முன்னதாக, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து பொங்கல் வைத்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து கால்நடைகளுக்கு பொங்கல் மற்றும் கரும்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று பெரியோா்களின் காலில் விழுந்து ஆசிா்வாதம் பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...