விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்கம்பியை தொட்ட சிறுவன் காயம்.

உயா் அழுத்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், ஞாயிற்றுக்கிழமை சிறுவன் காயமடைந்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

உயா் அழுத்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், ஞாயிற்றுக்கிழமை சிறுவன் காயமடைந்தாா்.

மன்னாா்குடி அடுத்த விக்கிரபாண்டியம் மேலத்தெருவில் வசிக்கும் என். செந்தில்(40). இவரது வீட்டிற்கு, முதல்சேத்தியை சோ்ந்த உறவினா் பாசில் மகன் சஞ்சய் (13) பொங்கல் பண்டிகைக்காக வந்துள்ளாா். , 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவரான இவா், ஞாயிற்றுக்கிழமை செந்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று, அருகே செல்லும் உயா் அழுத்த மின் கம்பியை தொட்டுள்ளாா். இதில் தூக்கி வீசிப்பட்டு, தீக்காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இது குறித்து விக்கிரப்பாண்டியம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்குபதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.