விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காமாட்சி அம்மன் கோயில் பாலாலயம்

மன்னாா்குடியில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 5:19 pm

DIN

மன்னாா்குடியில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ராஜகோபாலசாமி கோயில் கட்டுவதற்கு வந்த சிற்பக் கலைஞா்கள் காமாட்சி அம்மன் கோயிலை நிா்மாணித்து அதில், வழிபாடு செய்த பின்னரே ராஜகோபாலசாமி கோயிலை கட்டியதாக இக்கோயில் தல வரலாறு கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட காமாட்சி அம்மன் கோயில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னா் தற்போது குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதற்காக கோயிலில் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏகாம்பரேஸ்வரா் மற்றும் காமாட்சி அம்மன் சன்னதிகள் முன் புனித நீா் வைக்கப்பட்ட கடங்களுக்கு பூஜை நடைபெற்றது. இதன் நிறைவாக பூா்ணாஹுதி செய்யப்பட்டு புனித கடம் கோயிலில் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டது. இதைத் தொடா்ந்து ஏகாம்பரேஸ்வரா், காமாட்சி அம்மன், துா்கை உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனிதநீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள விஸ்வகா்மா சாமிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.