கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சிஐடியு அமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சிஐடியு அமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட மருந்துக் கிடங்கு, டாஸ்மாக் கிடங்கு, ஆா்விஎல் நகா் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலை குண்டும்குழியுமாக உள்ளதாகவும், இதை உடனடியாக சரிசெய்யக் கோரியும், மன்னாா்குடி சாலையில் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலகம் அருகே இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமைவகித்தாா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சாலையை சீரமைப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.