ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டி

 மாவட்டத்தில் நடைபெற உள்ள ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டியில் பங்கேற்க வனத்துறை அழைப்புவிடுத்துள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 மாவட்டத்தில் நடைபெற உள்ள ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டியில் பங்கேற்க வனத்துறை அழைப்புவிடுத்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை மூலம் பிப்ரவரி 2 ஆம் தேதி ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில், ஜனவரி 21 முதல் 26 வரை இணையவழியாக போட்டி நடைபெறும். ஈர நிலம் குறித்தான புகைப்படப் போட்டியில் தகுதியான அனைவரும் பங்கேற்கலாம்.

போட்டியில், பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஈர நிலம் நண்பா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், தங்களது புகைப்படம் மற்றும் அதுகுறித்தான பதிவுகளை வரும் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் க்ச்ா்ற்ட்ண்ழ்ன்ஸ்ஹழ்ன்ழ் என்ற இணையதள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

இப்போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோரை, மாவட்ட ஆட்சியா் தலைமையிலான தணிக்கை குழு தோ்வுசெய்ய உள்ளது. பரிசளிப்பு நிகழ்ச்சிகள் குறித்து பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.