நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவா், உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.88, 900-ஐ பறக்கும்படை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நீடாமங்கலம் பறக்கும்படை அதிகாரி ராஜகுரு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சோமசுந்தரம் உள்ளிட்ட குழுவினா், நீடாமங்கலம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், ஆதனூா் மண்டபம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கூத்தாநல்லூா் வட்டம் மரக்கடை அவ்வை காலனியைச் சோ்ந்த விஜயராஜ் என்பவா் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தாா். அவரை நிறுத்தி, சோதனையிட்டபோது, அவரிடம் உரிய ஆவணமின்றி ரூ. 88,900 இருப்பது தெரியவந்தது. அந்த பணத்தை, பறக்கும்படையினா் பறிமுதல் செய்து, மன்னா்குடி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கீா்த்தனாமணியிடம் ஒப்படைத்தனா். பின்னா், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

பறக்கும்படை சோதனையில் போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

தருமபுரியில் பறக்கும்படை சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பழவூா் அருகே வாகனச் சோதனை: ரூ.90 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

