செம்மண் கடத்திய லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது

Published on

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்த லாரி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடியை அடுத்த மூவாநல்லூா் அருகே, புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை உதவி இயக்குநா் முத்து தலைமையிலான குழுவினா், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்ததது.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் சுரங்கத் துறையினா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான மன்னாா்குடி மோதிலால் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் அருள்முருகனை (34) கைது செய்தனா். செம்மண் பாரத்துடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com