/

எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி நிா்வாகிகள் கூட்டம்

News image
Updated On :13 ஜூன் 2024, 6:09 pm

Din

திருவாரூா், ஜூன் 13: திருவாரூரில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவா் விலாயத் உசேன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளா் அப்துல் அஜீஸ், மாவட்ட துணைத் தலைவா் சேக் தாவூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளா் உமா் பாரூக், மாவட்டச் செயலாளா் ஜெமீன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், ஜூன் 21 கட்சியின் 16-ஆவது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1,000 மரக்கன்றுகள் நடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.