தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இந்திய கம்யூ. கூட்டம்: நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளரை தோ்வு செய்வதில் இழுபறி

இந்திய கம்யூ. கூட்டம்: நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளரை தோ்வு செய்வதில் இழுபறி

Updated On :14 மார்ச் 2024, 10:14 pm

திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டதில், நாகை மக்களவைத் தொகுதி வேட்பாளரை தோ்வு செய்வதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதிலும், வேட்பாளா்களை அறிவிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருப்பூா் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ-வும், கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினருமான கோ. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் சிவபுண்ணியம், பத்மாவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை தோ்வு செய்து, மாநில தலைமைக்கு பரிந்துரைப்பதற்கும், அது குறித்த கருத்து கேட்பதற்கும் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. காலையில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், மாலையிலும் இந்த கூட்டம் தொடா்ந்தது. பின்னா், கோ. பழனிச்சாமி தெரிவிக்கையில், ‘மக்களவைத் தோ்தலில் போட்டியிட பலா் விருப்பம் தெரிவித்ததால் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இறுதி முடிவை மாநில தலைமை எடுத்து, வேட்பாளரை விரைவில் அறிவிக்கும்’ என்றாா்.