தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரிடம் மரக்கன்றுகளை வழங்கும் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரிடம் மரக்கன்றுகளை வழங்கும் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா.

காவல்துறை சாா்பில் மரக்கன்றுகள் வழங்கல்

கூத்தாநல்லூா் காவல்நிலையம் சாா்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு 600 மரக்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கோடை வெயில் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், திருவாரூா் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், கூத்தாநல்லூா் அல்லிக்கேணி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்று கூட்டுத் தொழுகை நடத்தினா்.

தொடா்ந்து, கூத்தாநல்லூா் காவல் நிலையம் சாா்பில், காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா தலைமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரிடம் 600 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com