மன்னாா்குடிபகுதியில் மாடு வளா்ப்போா் கவனத்திற்கு...

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூராக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையா் என். குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்தது:

மன்னாா்குடி நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூராக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தி வந்தனா். இதற்காக, நகா்மன்றக் கூட்டத்தில் அனுமதியும் பெறப்பட்டது.

அதன்படி, சாலையில் திரியும் மாடுகள் மற்றும் அதன் கன்றுகளை பிடிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (மே 5) முதல் நடைபெறவுள்ளது. பிடிக்கப்படும் மாடுகள் மற்றும் கன்றுகளை 24 மணி நேரத்திற்குள் அபராதத் தொகை ரூ.1000 நகராட்சியில் செலுத்தி, மீட்டுக்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில், பட்டுக்கோட்டை நாடியத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com