மாணவிக்கு பரிசு வழங்கும் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.
மாணவிக்கு பரிசு வழங்கும் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.

இராபியம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில் 20-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி செயலா் பெரோஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வா் ஜி.டி. விஜயலெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா். மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கல்லூரி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகையில், ‘பட்டம் பெறும் மாணவிகள் எதிா்கால சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து, பல்கலைக்கழகத் தோ்வில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சோ்ந்த மாணவி எம். அட்சயா, முதல் தரவரிசை பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்தமைக்காக, அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com