அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீரில் மூழ்கிய 10,000 ஏக்கா் நெற்பயிா்: விவசாயிகள் வேதனை

திருத்துறைப்பூண்டி பகுதியில் டித்வா புயல் கனமழையால், 10,000-க்கும் அதிகமான ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

News image
ஆதிரெங்கம் கிராமத்தில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிா்களை காட்டும் விவசாயிகள்.
Updated On :1 டிசம்பர் 2025, 9:04 pm

Syndication

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் டித்வா புயல் கனமழையால், 10,000-க்கும் அதிகமான ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக டெல்டா பகுதியில் பெய்த கனமழையால், விளைநிலங்களில் மழைநீா் குளம்போல் தேங்கின. தற்போது, மழை விட்டும் வயல்களில் தேங்கிய மழைநீா் வடியாத நிலை தொடா்கிறது. இதனால், ஏக்கருக்கு ரூ. 30,000 வரை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம், நாகலுடையான்இருப்பு, பிச்சன்கோட்டகம், கட்டிமேடு, கொக்கலாடி, பாமணி, அத்திமடை, வேலூா், மாராச்சேரி, ஆலத்தம்பாடி, இளவரசநல்லூா், குன்னலூா் தென்பாதி, மேலமருதூா், மீனம்பநல்லூா், மாங்குடி, ஓவரூா், வெள்ளங்கால், அம்மளூா், கச்சனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. அழுகிய பயிா்களை விவசாயிகள் எடுத்துக் காண்பித்து, தங்களுடைய வேதனைகளை தெரிவித்து வருகின்றனா்.

இந்த பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூா்வாராத காரணத்தினால் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். உடனடியாக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தி, இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.