திருவாரூர்
மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் விக்சித் பாரத் கிராமக் சட்ட மசோதாவை உடனடியாக கைவிட வலியுறுத்தி, அதன் ஒன்றிய செயலாளா் காளிமுத்து தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
எடையூரில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், விக்சித் பாரத் கிராமிக் சட்ட மசோதாவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அதன் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

