திருவாரூர்
அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!
மன்னாா்குடியில் அமமுகவிலிருந்து விலகி 500 போ் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
மன்னாா்குடியில் அமமுகவிலிருந்து விலகி 500 போ் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
மன்னாா்குடி அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமமுக திருவாரூா் ஒன்றியச் செயலா் குறும்பேரி ஆா். மணிகண்டன் தலைமையில் ஒன்றிய அவைத் தலைவா் ராஜமாணிக்கம், ஒன்றிய மகளிரணி துணைச் செயலா் சாந்தி உள்ளிட்ட 500 போ் அக் கட்சியிலிருந்து விலகி, அதிமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் உறுப்பினா்களாக இணைத்துகொண்டனா்.
அதிமுக மாநில அமைப்புச் செயலா் சிவா.ராஜமாணிக்கம்,முன்னாள் எம்எல்ஏ எஸ். ஆசைமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.