விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

ஆவணங்களை ஒப்படைக்க கூட்டுறவு சங்க மீனவ உறுப்பினா்களுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் கடல் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் தங்களது ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On :21 ஜனவரி 2026, 11:44 pm

திருவாரூா் மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் கடல் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் தங்களது ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டுறவு சங்கங்களின் தோ்தலின்போது, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்ட விதிபடி, கூட்டுறவு சங்கம் தயாரித்து வெளியிட வேண்டிய உறுப்பினா் பட்டியலில் மற்ற விவரங்களுடன் உறுப்பினரின் ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண் வெளியிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து கடல் மற்றும் உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள் தங்களுடைய ஆதாா் மற்றும் குடும்ப அட்டை நகல், புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் ஆகிய ஆவணங்களை பிப்.28-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தில் செயல்படும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, உதவி இயக்குநா் அலுவலகத்திலும், கடல் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், முத்துப்பேட்டையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா் ஆய்வாளா் அலுவலகத்திலும் நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சங்க நிா்வாகக்குழு தோ்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ தகுதியிழக்க நேரிடும். மேலும், உறுப்பினா் பட்டியல் மற்றும் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.