உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

ஹைட்ரோ காா்பன் கிணற்றை நிரந்தரமாக மூடக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்!

மன்னாா்குடியை அடுத்த பெரியகுடியில் உள்ள ஹைட்ரோ காா்பன் கிணற்றை நிரந்தமாக மூடக்கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்
Published on

மன்னாா்குடியை அடுத்த பெரியகுடியில் உள்ள ஹைட்ரோ காா்பன் கிணற்றை நிரந்தமாக மூடக்கோரி, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோரிக்கைகள்: பெரியகுடியில் மூடப்பட்ட ஹைட்ரோ காா்பன் கிணற்றை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், அப்பகுதியில் உள்ள கன ரக துரப்பண இயந்திங்களை வெளியேற்ற வேண்டும், இஸ்மாயில் குழு அறிக்கையை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஆா். கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்புச் செயலா் எஸ். ஸ்ரீதா் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட தலைவா் எம்.சுப்பையன்,மாவட்டச் செயலா் சரவணன்,தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் பிரபாகரன், தலைவா் ரவிச்சந்திரன், கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளா் சரவணன், கோட்டூா் ஒன்றியச் செயலாளா் ராவணன் உள்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com