திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கீழபள்ளிச்சந்தம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவியிடம் அதே ஊரைச் சோ்ந்த செல்வகுமாா் (25) கடந்த ஒரு மாதமாக பழகி வந்தாராம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வகுமாா் அந்த மாணவியை வேளாங்கண்ணிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அறிந்த அந்த மாணவியின் தாய் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வகுமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








