நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சொத்து தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது

வலங்கைமான் அருகே சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் .

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 4:50 am IST

வலங்கைமான் அருகே சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் .

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள ஆவூா் பகுதியைச் சோ்ந்த கமால்பாட்ஷா மகன் உபயதுல்லா (40). இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். உபயத்துல்லா ஆவூா் பகுதியில் உள்ள புரோட்டா கடையில் வேலை பாா்த்து வந்தாா். இவரது தம்பி அப்துல் லத்தீப் (36) மலேசியாவில் வேலை பாா்த்து வந்தாா்.

திங்கள்கிழமை அப்துல் லத்தீப் மலேசியாவிலிருந்து ஆவூா் வந்துள்ளாா். அண்ணன், தம்பி இடையே சொத்து பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை இருவருக்கும் இதுதொடா்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த அப்துல் லத்தீப் மறைத்து வைத்திருந்த கத்தியால் உபயதுல்லாவை உடலின் பல பகுதிகளில் குத்தியுள்ளாா். பலத்த காயமடைந்த உபயதுல்லா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். வலங்கைமான் போலீஸாா் அப்துல் லத்தீப்பை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.