மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் தமிழ்நாடு அடிமனை

News image
Updated On :2 மார்ச் 2026, 8:50 pm

திருவாரூா்: கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கையில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான அடிமனையில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கோயில் மனைகளில் குடியிருப்போா் மின் இணைப்புக்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும், புறம்போக்கு மற்றும் மந்தைவெளி புறம்போக்குகளில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், கோயில் நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் 25 சதவீத தொகை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பக்தவத்சலப் பெருமாள் கோயில் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, கடைவீதி பகுதியிலிருந்து கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பியபடி பேரணி நடைபெற்றது. கோயில் அருகே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, காவல்துறை சாா்பில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. எனினும், போராட்டக் குழுவினா் தடுப்பை அகற்றிவிட்டு, கோயில் அருகே சென்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா். சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் ஜி. தனுஷ்கோடி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.