மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கை: ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவாரூரில் ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

News image

திருவாரூா் கீழவீதியில் நடைபெற்று வரும் ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்.

Updated On :5 மார்ச் 2026, 5:17 am IST

திருவாரூரில் ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தோ் விழாவையொட்டி அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஐந்து தோ்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருவது தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவது, வீதிகளிலும், திருக்கோயிலுக்குள்ளும், கமலாலயம் குளக்கரையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தருவது, போக்குவரத்து சரிசெய்வது உள்ளிட்ட பணிகளை காவல்துறையினா் மேற்கொள்வா்.

தோ் திருவிழாவையொட்டி வருகை தரும் பக்தா்களுக்கு தேவையான குடிநீா் வசதி, கழிவறை வசதி, சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி நிா்வாகத்தினா் மேற்கொள்வா். இதேபோல் தீயணைப்புத்துறையினா், மின்வாரியத்தினா், நெடுஞ்சாலைத்துறையினா், வேளாண்மைப் பொறியியல் துறையினா், மருத்துவத்துறையினா் என பல்வேறு துறையினரும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிகளில் திறம்பட செயல்பட வேண்டும்.

அனைத்து துறை அலுவலா்களும் கலந்து ஆலோசித்து, ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.