எரிவாயு உருளை முறைகேடு: ஒருவா் கைது
திருவாரூரில் முறைகேடான வகையில் வணிகப் பயன்பாட்டுக்கு எரிவாயு உருளைகளை வழங்கியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது - கோப்புப் படம்
திருவாரூரில் முறைகேடான வகையில் வணிகப் பயன்பாட்டுக்கு எரிவாயு உருளைகளை வழங்கியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவாரூா் அருகே வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் முறைகேடுகள் நடப்பதாக திருவாரூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளா் ஜெகதீஸ்வரன், உதவி ஆய்வாளா் இளமாறன், தலைமைக் காவலா்கள் வசந்தகுமாா், தனசேகரன் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா், திருவாரூா் பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
புலிவலம் பகுதியில், வீட்டு உபயோக எரிவாயு உருளையிலிருந்து எரிவாயுவை வணிகப் பயன்பாட்டு உருளைக்கு மாற்றுவதும், அதன்பிறகு வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், டீக்கடைகளுக்கு வழங்குவதும் தெரிய வந்தது.
இதையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத் துறை போலீஸாா் சோதனை நடத்தி, வீட்டு உபயோக எரிவாயு உருளை 22, வணிகப் பயன்பாட்டு உருளை 23 என மொத்தம் 45 எரிவாயு உருளைகளையும், எரிவாயு உருளைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட சிறிய ரக சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, புலிவலம் மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ச. சுப்ரமணியனை (44) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

