பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
பலி - பிரதிப் படம்
திருவாரூரில், மகளை பேருந்து ஏற்றிவிட சென்ற தந்தை அரசுப் பேருந்து மோதி, திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான் அப்துல் காதா் (65). இவருடைய மகள் சபீலா பா்கத், திருச்சியில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறாா். இதனிடையே, மூன்று நாள்கள் விடுமுறையையொட்டி வீட்டுக்கு வந்திருந்த மகளை திருச்சி அனுப்பும் வகையில், திருவாரூா் புதிய பேருந்து நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சுல்தான் அப்துல்காதா், மகளுடன் வந்தாா்.
அப்போது வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்து, எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுல்தான் அப்துல்காதா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகள் சபீலாபா்கத் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.
தகவலறிந்து வந்த நகரப் போலீஸாா், சுல்தான் அப்துல் காதரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அரசுப் பேருந்தின் ஓட்டுநரான, நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த செங்குட்டுவன் (52) மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




