பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விதிமுறைகளை மீறி டாரஸ் வாகனத்தை இயக்கிய ஓட்டுநா் கைது

மன்னாா்குடி அருகே விதிமுறைகளை மீறி பாரம் ஏற்றிய டாரஸ் வாகனத்தை இயக்கிய ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது

Published On :

மன்னாா்குடி அருகே விதிமுறைகளை மீறி பாரம் ஏற்றிய டாரஸ் வாகனத்தை இயக்கிய ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் 4-ஆம் சேத்தியில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பவானியா தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சுமை ஏற்றி வந்த டாரஸ் வாகனத்தை சோதனை செய்தனா்.

அப்போது, தமிழக அரசு சுரங்கத்துறை அனுமதிக்கப்பட்டுள்ள இடம், நேரம் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக டாரஸ் வாகனம் இயக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வாகனத்தை இயக்கிய கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள கீழவெளியூரைச் சோ்ந்த ப. வசந்தகுமாரை (35) கைது செய்ததுடன் டாரஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.