உணவுப் பிரியர்களை ஈர்க்கும் ஏ2பி உணவகம்
புதுதில்லி, ஜூன் 7: புதுதில்லி கிரீன் பார்க் பகுதியில் உள்ள அடையாறு ஆனந்த பவன் (ஏ2பி) உணவகம் தென்னிந்தியர்களை மட்டுமன்றி வட இந்தியர் உணவுப் பிரியர்களையும் ஈர்த்து வருகிறது. புதுதில்லி தெற்குப் பகுதியி


புதுதில்லி, ஜூன் 7: புதுதில்லி கிரீன் பார்க் பகுதியில் உள்ள அடையாறு ஆனந்த பவன் (ஏ2பி) உணவகம் தென்னிந்தியர்களை மட்டுமன்றி வட இந்தியர் உணவுப் பிரியர்களையும் ஈர்த்து வருகிறது.
புதுதில்லி தெற்குப் பகுதியில் உள்ள கிரீன் பார்க் பகுதியானது பல்வேறு கடைகள் நிறைந்த இடமாகும். இப் பகுதியில் 2006 முதல் ஏ2பி உணவகம் இயங்கி வருகிறது.
மூன்று தளங்களைக் கொண்ட இந்த உணவகத்தின் தரை தளத்தில் இனிப்பு, கார வகைகளுக்காக பிரத்யேக விற்பனையகம் செயல்படுகிறது. இதில், பானி பூரி போன்ற "சாட்' உணவு வகைகள், தென் இந்திய உணவு வகைகளான இனிப்பு போளி, இனிப்பு ஆப்பம், கார ஆப்பம் விற்கப்படுகின்றன.
முதல் தளத்தில் தென் இந்திய, வட இந்திய உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. "ஏ2பி பிளாட்டர்' உணவு வகையில் மெதுவடை, இட்லி, மினி மசாலா தோசை, மினி ரவா கேசரி, நெய்ப் பொங்கல் வழங்கப்படுகின்றன.
தென் இந்திய உணவு வகைகளில் அரிசி சாதம், சாம்பார், 2 சப்பாத்தி, பூரி, குருமா, தயிர், ரசம், பொறியல், கூட்டு, இனிப்பு, அப்பளம் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.115.
இதுதவிர, வட இந்தியர்கள் விரும்பி உண்ணும் சுருண்ட தோசை சிறிதாக வெட்டி செய்யப்பட்டு பரிமாறப்படுகின்றன. இதன் விலை ரூ.110.
உணவகத்தின் மூன்றாவது மாடியில் மகளிர் ஒன்றுகூடும் "கிட்டி பார்ட்டி'க்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது. அதேபோன்று, குடும்பத்தினர் ஒன்றுகூடி விழா நடத்தவும், பிறந்த நாள், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கும் வசதி செய்து தரப்படுகிறது.
இந்த ஏ2பி உணவு விடுதியில் தீபாவளி, ஹோலி பண்டிகைக் காலங்களில் சிறப்பு விற்பனையும் நடைபெறுவதாக இதன் மேலாளர் ஆர்.முருகன் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இனிப்பு வகைகளில் எஸ்பிஎம் ஸ்வீட்ஸ், ஹார்லிக்ஸ் மைசூர்பா, பால் மைசூர்பா, லட்டு, அதிரசம், சந்திரகலா, சூர்யகலா, மாவு லட்டு, ரவா லட்டு, பாம்பா அல்வா
ஆகிய ஸ்வீட் வகைளும், ரஸ குல்லா, ரசமலாய், மலாய் சாண்ட்விச், ராஜ்போக், சம்சம் போன்ற பெங்காலி வகை இனிப்புகளும், மில்க் பர்பி, கோதுமை பர்பி, சாக்கலேட் பர்பி, பிஸ்தா பர்பி போன்றவையும் விற்கிறோம்.
தீபாவளி பண்டிகைக் காலத்தின்போது 4 அடுக்கு பாக்ஸில் பலதரப்பட்ட இனிப்பு வகைகளைச் சேர்த்து வைத்து விற்கிறோம். ஹோலி பண்டிகையின்போது சிறப்பு அயிட்டங்கள் விற்கப்படுகின்றன.
அதேபோன்று, கிஸ்மிஸ், பாதாம், அக்ரூட், கலர் பாதாம், வறுத்த பிஸ்தா போன்றவை கொண்ட சிறப்பு உலர் பழம் பாக்கெட்டும் விற்கிறோம்.
சுமார் 200 வகை இனிப்பு வகைள் தயாரித்து விற்கிறோம். உணவு, இனிப்பு தயாரிப்புப் பணியில் சுமார் 100 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
எங்கள் உணவகத்திற்கு தில்லியின் துவாரகா, ஆர்.கே. புரம், ரோகிணி, ஜனக்புரி, நொய்டா, குர்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். முக்கிய வி.ஐ.பி.களும் வருகின்றனர்.
தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லிக்கு சுற்றுலா வரும் பயணிகளில் பலரும் விரும்பி உணவருந்த வருகின்றனர். பொதுமக்களின் வரவேற்பு காரணமாக ஏ2பி உரிமையாளர்களான கே.டி. வெங்கடேஷ் ராஜா, கே.டி. ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஏற்கெனவே உள்ள இரு கடைகள் தவிர மேலும் சில உணவகங்களை தில்லியில் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...