/

உறவுக்குப் பாலம்

சமூக வலைதளங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வது உலகம் முழுவதும் பரவலாகவே அதிகரித்து வருகிறது.  இச்சூழலில், தில்லி காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு உருவாக்கியுள்ள "தில்லி போக்குவரத்து போலீஸ்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:09 am

வே.சுந்தரேஸ்வரன்

சமூக வலைதளங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வது உலகம் முழுவதும் பரவலாகவே அதிகரித்து வருகிறது.

 இச்சூழலில், தில்லி காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு உருவாக்கியுள்ள "தில்லி போக்குவரத்து போலீஸ்' எனும் பெயரிலான ஃபேஸ்புக் கணக்கு பொதுமக்களுக்கும், போலீஸôருக்கும் இடையே நண்பனாக உதவி வருகிறது

 இந்த ஃபேஸ்புக் கணக்கு 2010-ம் ஆண்டு மே 3-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பக்கத்திற்குத் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதற்கு இதனை 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் விரும்புவதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

 இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுவோர் குறித்த தகவல்களை பொதுமக்கள் அளிப்பது அதிகரித்துள்ளது.

 இந்த முகநூல் பக்கத்தில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு, வாகன போக்குவரத்துப் பாதிப்பு தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டு வந்தன.

 இந் நிலையில், பொதுமக்களே ஆர்வத்துடன் முன்வந்து வாகன விதிமீறல், செயல்படாத போக்குவரத்து சிக்னல் விளக்குகள், போக்குவரத்து போலீஸôரின் மெத்தன நடவடிக்கை தொடர்பான புகார்களை அளிக்கத் தொடங்கினர்.

 போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகைப்படங்கள், விடியோ ஆகியவற்றைப் பொதுமக்களே அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளை முறைப்படுத்துவது மட்டுமின்றி கவனக்குறைவாகச் செயல்படும் போக்குவரத்து போலீஸôரைக்கூட சரிப்படுத்த இந்த வலைதளம் பயன்படுகிறது போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

 தில்லி போலீஸýக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக ஃபேஸ்புக் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 தீன் மூர்த்தி போக்குவரத்து போலீஸ் லைனில் உள்ள தலைமையிடத்தில் ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பதற்காகவே பிரத்யேக குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

 பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் தெரிவிக்கப்படுகிறது.

 புகாருக்கு உடனடி பதில்:

 இது குறித்து போக்குவரத்துக் காவல் இணை ஆணையர் சத்யேந்திர கர்க் "தினமணி' செய்தியாளரிடம் கூறியதாவது:

 போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தில்லி போலீஸின் ஃபேஸ்புக் கணக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு உடனடி பதில் அளிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யேக குழு நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கூட்டு முயற்சியுடன் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 தினமும் சுமார் ஆயிரம் ஆலோசனைகள் மற்றும் புகார்கள் வருகின்றன. போக்குவரத்து

 சிக்னல் விளக்கு செயல்படாதது, போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து விதிமீறல் குறித்து பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கிறார்கள்.

 போலீஸôரின் செயல்பாடு, அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என எல்லாத் தரப்பினரின் குறைகளையும், நிறைகளையும்கூட பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இது போக்குவரத்து மேலாண்மையில் மிகுந்த பயனுள்ளதா இருக்கிறது.

 ஃபேஸ்புக் மூலம் வந்த புகார்கள் அடிப்படையில் இதுவரை 15 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

 72 லட்சம் வாகனங்கள் தில்லி மாநகரில் உள்ளன. வெளியூர்களில் இருந்து தில்லிக்கு வரும் வாகனங்களைச் சேர்த்தால் தினமும் தலைநகரின் சாலைகளில் சுமார் 1 கோடி வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால், சாலைகளில் ஏற்படும் கடும் நெரிசலை சீர்படுத்த தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார் சத்யேந்திர கர்க்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.