"ஹோஹோ' பஸ்!
இந்தியாவின் கடைக்கோடி ஏழைக்கும்கூட தில்லிக்கு வரவும், சுற்றிப் பார்க்கவும் ஓர் ஆசை இருக்கும்! தில்லியின் புராதனச் சின்னமான குதுப் மினார், மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், தில்லியின் பெருமையைச்


இந்தியாவின் கடைக்கோடி ஏழைக்கும்கூட தில்லிக்கு வரவும், சுற்றிப் பார்க்கவும் ஓர் ஆசை இருக்கும்!
தில்லியின் புராதனச் சின்னமான குதுப் மினார், மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட், தில்லியின் பெருமையைச் சொல்லும் செங்கோட்டை, புரானா கிலா, இந்தியா கேட், தில்லி ஹாத், லோட்டஸ் டெம்பிள், ஹுமாயூன் டோம்ப் என பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பவை.
இவற்றை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிர்க்கும்போதே டாக்ஸி வாடகையை நினைத்தால் மலைப்பு வந்துவிடும்!
காரில் உலா வருவது பணம் உள்ளவர்களுக்கு சுலபம். ஆனால், நடுத்தர இந்தியனுக்கு...?
இதை உணர்ந்ததாலோ என்னவோ தில்லி அரசு ஏற்பாட்டில் காமன்வெல்த் போட்டியை ஒட்டி விடப்பட்டது "ஹோஹோ' சுற்றுலா பஸ் சேவை.
தில்லி போன்ற ஊரைச் சுற்றிப் பார்க்க வாடகைக் காரில் சென்றால் கூட குறிப்பிட்ட இடத்தை நாம் நினைத்தவாறு கூடுதல் நேரம் பார்க்க முடியாது. மீட்டர் ஏறுமே...?
"சீக்கிரம்... சீக்கிரம்....' என்று சுற்றுலா வழிகாட்டியும், வாகன ஓட்டுநரும் அவசரப்படுத்தி அழைத்துச் செல்வது இயல்பான விஷயம்தான்.
ஆனால், அதற்கெல்லாம் அவசியம் இல்லாத வகையில், சுற்றுலா இடங்களில் ஆற, அமர இருந்து ரசித்து, ருசித்துப் பார்த்த பிறகு செல்வதற்காகவே "ஹாப் ஆன் ஹாப் ஆஃப்' எனும் பெயரிலான் ஹோஹோ (ஏர்ஏர்) சேவை இயக்கப்பட்டு வருகிறது.
அடர் நீல வண்ணத்தில் பளிச்சென செல்லும் இந்த "ஹோஹோ' பஸ்ûஸப் பார்த்தவுடனேயே "இது கண்காட்சி பஸ்ஸô?' என்று வியக்கும் அளவுக்கு அத்தனை ஈர்ப்பு!
குளுகுளு வசதியுடன்கூடிய இந்த பஸ் சேவையை தில்லி சுற்றுலா மற்றும் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனும், பர்ப்பிள் யுஎம்டிசி டிரான்ஸிட் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.
குடும்பத்துக்கு சலுகை
இந்த பஸ்ஸில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ. 300 கட்டணம் (குழந்தைகளாக இருந்தால்
ரூ. 150).
பெற்றோர், இரு குழந்தைகள் என 4 பேர் செல்வதற்கு டிக்கெட் ரூ. 800-க்கு வழங்கப்படுகிறது.
ரூ. 300 செலுத்தி தனிநபர் செல்வோர் எடுக்கும் டிக்கெட்டை கூடுதலாக ஒரு நாள் என மொத்தம் இரு தினங்கள் "ஹோஹோ' பஸ்ஸில் சுற்றிப் பார்க்கலாம்.
காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தில்லியில் உள்ள 19 சுற்றுலா இடங்களில் நினைத்த இடத்தில் இறங்கி, நிதானமாக விருப்பமான நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்த இடத்துக்கு ஹோஹோ பஸ்ஸிலேயே செல்லலாம்.
தினமும் 200 பயணிகள்
இது குறித்து, பர்ப்பிள் யுஎம்டிசி டிரான்ஸிட் நிறுவன மேலாளர் (செயல்பாடுகள்) திராஜ் கத்தார்க்கி கூறியது:
காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு, இந்த பஸ் சேவையை தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கி வைத்தார்.
தினமும் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள் இந்த பஸ் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தில்லியில் ஃபெரோஷா கோட்லா, செங்கோட்டை, ராஜ்காட், நேஷனல் காலரி ஆஃப் மார்டன் ஆர்ட், இந்தியா கேட், புரானா கிலா, ஹுமாயூன் டோம்ப், லாஜ்பத் நகர், லோட்டஸ் டெம்பிள், சாக்கேட் மால்ஸ், குதூப் மினார், ஹவுஸ் காஸ், தில்லி ஹாத், சஃப்தர்ஜ் டோம்ப், இந்திரா காந்தி நினைவு அருங்காட்சியகம், நேரு அருங்காட்சியகம், தேசிய அருங்காட்சியகம், ஜன்பத், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களுக்கு ஹோஹோ பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது 14 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
முதலில் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது 30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுலா வழிகாட்டிகளும் பஸ்களில் உள்ளதால் சுற்றுலா இடங்கள் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
ஹோஹோ பஸ்ஸில் அக்டோபர் முதல் ஜனவரி வரை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கின்றனர். மே முதல் ஜூலை வரை உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.
டிக்கெட் கிடைக்குமிடம்:
டிக்கெட்டை ஜ்ஜ்ஜ்.ட்ர்ட்ர்க்ங்ப்ட்ண்.ஸ்ரீர்ம் என்ற இணையதளம் வழியாகவோ அல்லது பாபா கரக் சிங் மார்கில் உள்ள ஹோஹோ தகவல் மையத்திலோ, அல்லது ஹோஹோ பஸ்ஸிலோ பெற்றுக் கொள்ளலாம். திங்கள்கிழமை விடுமுறை நாளாகும். அன்றைக்கு பஸ்கள் இயங்காது. மேலும், விவரங்களுக்கு 011-4094 0000 என்ற ஹெல்ப் லைனைத் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிக் குழந்தைகளைக்கூட தனி ஏற்பாட்டில் அழைத்துச் சென்று வருகிறோம். ஆர்.பி.வி.வி. பள்ளி, என்.டி.எம்.சி. பள்ளி மாணவர்களை 10,000 பேரை சிறப்பு சுற்றுலா ஏற்பாட்டில் அழைத்துச் சென்றோம்.
இரட்டை அடுக்கு பஸ்களை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது. தற்போது முழுமையாக சுற்றுலாவுக்கு மூன்றரை மணிநேரம் ஆகிறது. இரண்டு மணிநேரம் என்ற குறைந்த நேர சுற்றுலாவும் இயக்கப்பட உள்ளது என்று திராஜ் கத்தார்க்கி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...