/

பேருந்துக்கு காத்திருந்த இருவர் லாரி மோதி சாவு

தில்லி செüத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். அது தொடர்பாக லாரி டிரைவர் நயீம் கைது செய்யப்பட்டார்.

Updated On :13 மே 2013, 12:54 am IST

தில்லி செüத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். அது தொடர்பாக லாரி டிரைவர் நயீம் கைது செய்யப்பட்டார்.

""தெüலாகுவானிலிருந்து ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்த லாரி, செüத் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில்  நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது.

அதில் பிகாரைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவரும், அடையாளம் தெரியாத ஒரு இளைஞரும்  சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மூவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்'' என்று போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.