ஐனக்புரி டி.டி.இ.ஏ. பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

மண்டல விளையாட்டுப் போட்டிகளில் தில்லி தமிழ் கல்விக் கழக (டி.டி.இ.ஏ.) பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று பரிசுகளை வென்றனர்.
Updated on
1 min read

மண்டல விளையாட்டுப் போட்டிகளில் தில்லி தமிழ் கல்விக் கழக (டி.டி.இ.ஏ.) பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்று பரிசுகளை வென்றனர்.
தில்லி 18-ஆம் மண்டலத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் டிடிஇஏ ஜனக்புரி பள்ளி உள்பட 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகள் தில்லி விகாஸ்புரியில் உள்ள இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு அறிவியல் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
ஜூனியர் பிரிவு மாணவிகளுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மாணவிகள் ரேவதி, பூஜா, ரம்யா, ரேணுகா (9-ஆம் வகுப்பு) ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்றனர். 800 மீட்டர் ஓட்டத்தில் ரம்யா இரண்டாம் பரிசு பெற்றார். 
சீனியர் பிரிவுக்கான ஓட்டப் பந்தயத்தில் சிம்ரன் (11- ஆம் வகுப்பு) இரண்டாம் பரிசு பெற்றார். போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com