மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓடும் பேருந்தில் பல்கலை.  மாணவியிடம் பாலியல் தொந்தரவு: இளைஞர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

ஓடும் பேருந்தில் தில்லிப் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞர் மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிந்து 

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:30 pm

DIN

ஓடும் பேருந்தில் தில்லிப் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞர் மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
தில்லி பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவி சம்பவத்தன்று வசந்த் வில்லேஜில் இருந்து ஐஐடி கேட் பகுதிக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது இருக்கை அருகே அமர்ந்திருந்த நடுத்தர வயதுடைய இளைஞர் திடீரென அருவருக்கத்தக்க வகையில் தனக்குத்தானே பாலியல் செய்கையில் ஈடுபட்டார். தவிர, அந்த மாணவியின் இடுப்பைத் தொட்டு சில்மிஷமும் செய்தார்.
இந்த செய்கைக்கு சம்பந்தப்பட்ட மாணவி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும், அவர் தனது ஆபாச செய்கையைத் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்மாணவி வசந்த் விஹார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். 
தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட நபரின் செய்கையை விடியோவில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவி சமூக ஊடகத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.