தில்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் ரூ.51 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
தில்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளிடமிருந்து ரூ.51 லட்சம் பெறுமானமுள்ள வெளிநாட்டு அன்னியச் செலாவணியை


புது தில்லி: தில்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளிடமிருந்து ரூ.51 லட்சம் பெறுமானமுள்ள வெளிநாட்டு அன்னியச் செலாவணியை கைப்பற்றி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்(சிஐஎஸ்எஃப்) மூத்த அதிகாரி தெரிவித்தாா்.
தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் 3 -ஆம் முனையத்தில் திங்கள்கிழமை துபாயிலிருந்து விமானத்தில் இறங்கிய தாரிக் ஆஸாம் என்கிற இந்திய பயணியின் பையில் சந்தேகத்திடமாக பொருட்கள் இருக்க அவரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அதில் ரூ.19.61 லட்சம் பெறுமானமுள்ள ஒரு லட்சம் சௌதி ரியால்ஸ் கரன்ஸி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த சௌதி கரன்சிக்கு போதுமான ஆவணங்கள் இல்லாததால் தாரிக் ஆஸாமிடமிருந்த அன்னியச் செலாவணி கரன்ஸிகள் கைப்பற்றப்பட்டு மேற்கொண்டு விசாரணைக்கு சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதே மாதிரி ஷாா்ஜாவிருந்து ஹைதராபாத் விமான நிலையத்தில் இறங்கிய சராா் ஹான்(29) என்கிற பயணியும் திங்கள்கிழமை பிடிபட்டாா். இவரிடம் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள அன்னியச் செலாவணிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விமான நிலைய பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் இந்த நபா் பிடிபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். அனுமதியின்றி கடத்திக்கொண்டு வரப்பட்ட ரூ. 51 லட்சம் மதிப்புள்ள இரு அன்னியச்செலவாணி விவகாரங்கள் குறித்தும் மேற்கொண்டு விசாரணைக்கு சுங்க இலாகா துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...