தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

போலி டிக்கெட் மூலம் விமான நிலையத்தில் நுழைந்த பிரிட்டனைச் சேர்ந்தவர் கைது

போலி விமான டிக்கெட் மூலம் தில்லி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:05 pm

போலி விமான டிக்கெட் மூலம் தில்லி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையப் பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது: 
சம்பவத்தன்று, தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையப் பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியில்லாத பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பி.எஸ். பிர்டி என்பதும், போலி விமான டிக்கெட் மூலம் விமான முனையத்திற்குள் நுழைந்ததும் தெரிய வந்தது.
 இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் செல்லும் தனது மனைவியைப் பார்ப்பதற்காக ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை பயன்படுத்தி விமான நிலையத்திற்குள் நுழைந்ததாக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரிடம் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவர் தில்லி காவல் துறையினரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். விமானப் போக்குவரத்து விதிகளின்படி செல்லத்தக்க டிக்கெட் இல்லாமல் விமான முனையப் பகுதிக்குள் நுழைவது சட்டவிரோதமாகும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.