வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பகுதியில் சுகாதாரமற்ற முறையில் தள்ளுவண்டியில் குடிநீர் விற்பனை செய்து வந்ததாக 572 பேர்களின் உரிமத்தை என்டிஎம்சி ரத்துச் செய்துள்ளது. மேலும், சுமார் 500 தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: என்டிஎம்சி பகுதியில் 1,623 பேர் உரிமம் பெற்று தள்ளுவண்டியில் குடிநீர் வீற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தக் கடைகளில் மாநகராட்சி சார்பில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து சோதனை நடத்தப்பட்டு வந்தது. அப்போது, சுகாதாரமற்ற முறையில் 572 தள்ளுவண்டிகளில் குடிநீர் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை நடத்தி வந்தவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, ஒரு லீட்டர் நீரில் அதிகளவில் 5 மில்லி கிராம் குளோரின் இருக்கலாம். ஆனால், இந்த தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரில் குளோரின் அளவு அதிகமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ரோஹித் சர்மா எதுவும் கூறவில்லை: ஷுப்மன் கில்

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து தில்லியில் போராட்டம் - புகைப்படங்கள்






