ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பள்ளியில் மாணவரை கத்தியால் தாக்கிய ஜூனியர் மாணவர் கைது

தில்லி ஷாதரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவரை கத்தியால் தாக்கியதாக ஜூனியர் மாணவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:25 am IST

தில்லி ஷாதரா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவரை கத்தியால் தாக்கியதாக ஜூனியர் மாணவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி  வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி ஷாதராவில் கிருஷ்ணா நகரில் அரசுப்  பள்ளி இயங்கி வருகிறது.  இப்பள்ளியில் சம்பவத்தன்று காலை  பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பள்ளியின் கீழ் தளத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை ஜூனியர்  மாணவர் கத்தியால் தாக்கியுள்ளார்.  இதில் அந்த மாணவருக்கு கை, கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது  உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஜூனியர் மாணவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.