ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம்: ஒப்பந்தம் செய்ய முடிவு எடுக்காத தில்லி அரசு!

ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை தேசிய தலைநகரில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதில் தில்லி அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 6:08 am IST

ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை தேசிய தலைநகரில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதில் தில்லி அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.
இது தொடர்பாக தில்லி சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநர் கீர்த்தி பூஷண் கூறியதாவது: ஏழை, நலிவுற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வசதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தில்லி அரசு தனது ஒப்புதலை இன்னும் அளிக்கவில்லை. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்திடமிருந்து அனுப்பப்பட்டுள்ள வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தில்லி அரசு இன்னும் ஆய்வு செய்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை கண்டறிய 2011-ஆம் ஆண்டு சமூக, பொருளாதார, ஜாதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (எஸ்இசிசி) புள்ளி விவரத்தை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொண்டு வருகிறது. அதன்படி, இந்த புள்ளிவிவரத்தின் கீழ் தில்லியில் இந்தத் திட்டத்தில் 30 லட்சம் பேரை மட்டுமே பங்கேற்கச் செய்ய முடியும். 1.80 கோடி மக்கள் தொகையை விட இந்த மக்கள்தொகை மிகவும் குறைவாகும். தில்லி அரசு தனது சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்களை வழங்குவதற்காக தில்லியில் உள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு குடும்ப அட்டைதாரர்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம்தான் இந்த பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும்.
எனினும், இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இத்திட்டத்தில் பங்கேற்க தில்லி அரசு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. மத்திய சுகாதார அமைச்சகம் மூலம் அனுப்பப்பட்டுள்ள வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிகழ்த்திய சுதந்திர தின உரையின் போது தன்னுடைய அரசானது செப்டம்பர் 25-ஆம் தேதி ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கும் என்றும், திட்டத்தை குறைபாடு ஏதும் இல்லாமல் வெளிப்படையாகச் செயல்படுத்தும் வகையில் திட்டத்தின் தொழில்நுட்பம் அடுத்த ஒரு மாதத்திற்கு பரிசோதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை, நலிவுற்ற கிராமப்புற குடும்பங்கள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர் குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, கிராமப்புறங்களில் 8.3 கோடி பேரும், நகர்ப்புறப் பகுதிகளில் 2.33 கோடி பேரும் எஸ்சிஇசி புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் 50 கோடி பேருக்கு சுகாதார வசதி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
இத்திட்டத்தில் பஞ்சாப், கேரளம், மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் சேர்வதற்கு இன்னும் ஆர்வம் காட்டவில்லை. ஒடிஸா மாநிலம் இத்திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"நம்பிக்கை முன்மாதிரி' அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 22 மாநிலங்கள் விரும்பம் தெரிவித்துள்ளன. இத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதுவே அரசால் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையிலான அங்கீகாரப் பட்டியல் குழுவில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சேர்ப்பதற்கான முறைசார் நடைமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் 80 சதவீதம் பயனாளிகள் சமூக, பொருளாதார, ஜாதிய மக்கள்தொகை புள்ளிவிவர அடிப்படையில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ் கரோனரி பைபாஸ் சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டென்டிங் பல்வேறு சிகிச்சைகள் பெறுவதற்கு வசதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தை (சிஜிஎச்எஸ்) விட 15 முதல் 20 சதவீதம் மலிவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.