தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஹார்திக் படேலுக்கு கேஜரிவால் ஆதரவு

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் ஹார்திக் படேல் கோரிக்கைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:23 pm

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் ஹார்திக் படேல் கோரிக்கைக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த படேல் சமூக தலைவர் ஹார்திக் தனது சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளுக்கு கிடைத்து வரும் ஆதரவு குறித்து தெரிவித்திருந்தார். 
இந்த பதிவை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரை பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள பதில் பதிவில், "விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி ஏழை விவசாயிகளுக்கு ஹார்திக் படேல் பாடுபட்டு வருகிறார். 
அனைத்து விவசாயிகளும், சமூகமும் அவருக்கு ஆதரவாக உள்ளது. அவருடைய போராட்டம் வீண்போகாது. கடவுள் அவருக்கு சக்தி அளிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.