வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டாம்: நிதின் கட்கரிக்கு வலியுறுத்தல்

வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதாலேயே அதிகளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன.

Published On :

வாகனங்கள் வேகமாக இயக்கப்படுவதாலேயே அதிகளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க வேண்டுமானால் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அரசு அடிபணிந்து விடக்கூடாது என மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை  
தேசிய சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். 
வர்த்தக ரீதியிலான வாகனங்களில் ஸ்பீடு கவர்னர்ஸ்'' எனப்படும் வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற உள்ளதாக அண்மையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில சாலை பாதுகாப்பு குழுவின் முன்னாள் துணைத்தலைவரும், தேசிய சாலை பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர் மற்றும்  ராஹத்  தன்னார்வ அமைப்பின் தலைவருமான கமல் சோய் தில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: ''ஸ்பீடு கவர்னர்ஸ்'' எனப்படும் வாகனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவியை அகற்றினால், அது சாலை விபத்துகள் அதிகரிப்புக்குத்தான் வழி வகுக்கும்.  
இந்தியா ஒரே விதமான போக்குவரத்தை அடிப்படையாக கொண்டதல்ல. நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலையும், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தாமல் வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க அனுமதிக்கக்கூடாது. 
வளர்ந்த நாடுகள் ஒரே விதமான, சீரான போக்குவரத்தை கொண்டு இயங்குவதால், அங்கு வேகக்கட்டுபாடுகளின் அவசியம் குறைவு. ஆனால் அங்கு கூட  ஸ்பீடு கவர்னர்ஸ்'' எனப்படும் வாகனங்களின் வேக கட்டுப்பாட்டு கருவிகளைதொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக நாம் இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது. 
எனவே, ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து வாகனங்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அனுமதிக்கக் கூடாது. நாட்டில் அதிக விபத்து ஏற்படக் காரணமே வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.