/

கொடநாடு விடியோ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரும் மனுமீது ஜன.25-இல் விசாரணை

கொடநாடு விடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சமூக

Updated On :23 ஜனவரி 2019, 6:11 am IST

கொடநாடு விடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்த பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) 35-ஆவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி சார்பில் அவரது வழக்குரைஞர் ஜி.எஸ். மணி கூடுதல் ஆவணங்களை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். கோத்தகிரி வட்டாட்சியருக்கு காவல் ஆய்வாளர் கடந்த 2017, ஜூலை 7-இல் எழுதிய கடிதம், கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளருக்கு மத்திய அரசு கடந்த 2017, ஆகஸ்ட் 21-இல் எழுதிய கடிதம் உள்ளிட்டவை கூடுதல் ஆவணங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.