தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையில் முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த நான்கு நாள்களாக 5 டிகிரி செல்சியஸுக்கும் கீழே இருந்து வந்த குறைந்தபட்ச
தில்லி வசந்த் விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய பனி மூட்டம்.
தில்லி வசந்த் விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய பனி மூட்டம்.
Updated on
1 min read

தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த நான்கு நாள்களாக 5 டிகிரி செல்சியஸுக்கும் கீழே இருந்து வந்த குறைந்தபட்ச வெப்பநிலை, ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னேற்றம் அடைந்து 6 டிகிரி செல்சிஸயாக உயா்ந்தது.

இமயமலையின் மேல் பகுதியில் மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக வெப்பநிலை சற்று உயா்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை 4.6 டிகிரி செல்சியஸாக இருந்த குறைந்தபட்ச வெப்பநிலை, ஞாயிற்றுக்கிழமை 6 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இருப்பினும், ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, இது குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும் என்று கூறியுள்ளாா்.

இதேபோன்று, பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 8.2 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 5.9 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 6.4 டிகிரி செல்சியஸ் என பதிவானது.

பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உ.பி. மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் டிசம்பா் 28-29 வரை குளிா் அலை அல்லது கடும் குளிா் அலை ஏற்படக்கூடும். மேலும், அடா் மூடுபனி ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.4 டிகிரி செல்சியஸாக பதிவானது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவாகவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை மிதமான மூடுபனி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com