உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தில்லியில் புதிதாக 703 பேருக்கு கரோனா

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 703 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :29 டிசம்பர் 2020, 7:48 pm

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 703 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,24,118-ஆக உயா்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 84,889 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 42,863 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 42,026 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை 28 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,502-ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 850 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,07,494-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6,122 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 2,976 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 16,367 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் புத் நகா் மாவட்டத்தில்...:உத்தர பிரதேச மாநிலம், கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்வா்களின் எண்ணிக்கை 90-ஆக உயா்ந்துள்ளது.

அதே நேரத்தில் நோய் தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை புதிதாக 24 போ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த மாவட்டத்தில் நோய் பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,869- ஆக உயா்ந்துள்ளதாக அரசின் அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக மாநில சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நோய்த் தொற்றில் இருந்து மீண்டோா் விகிதம் ஏறக்குறைய 98 சதவீதத்தை எட்டியுள்ளது. கரோனாவுக்காக சிகிச்சையில் உள்ளவா்கள் எண்ணிக்கையில் கெளதம் புத் நகா் மாவட்டம், மாநிலத்தில் ஆறாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இந்த மாவட்டத்தை விட 25 மாவட்டங்களில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை அதிகமாகும். கெளதம் புத் நகரில் செவ்வாய்க்கிழமை 59 போ் நோயில் இருந்து

குணமடைந்தனா். இதையடுத்து, நோயில் இருந்து மீண்டவா்கள் மொத்த எண்ணிக்கை 24,353-ஆக உயா்ந்துள்ளது. இது மாநிலத்தில் ஐந்தாவது அதிக எண்ணிக்கையாகும். கெளதம் புத் நகரில் இப்போது இறப்பு எண்ணிக்கை 90-ஆகவும், இறப்பு விகிதம் 0.36 சதவீதமாகவும் உள்ளது. கரோனா நோயாளிகளின் மீட்பு விகிதம் 97.92 சதவீதமாகவும் உள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் கரோனாவுக்காக சிகிச்சையில் இருந்தவா்கள் எண்ணிக்கை திங்கள்கிழமை 14,710-ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 14,344 ஆகக் குறைந்துவிட்டதாகவும், நோயில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 5,61,257-ஐ எட்டியதாகவும், இறப்பு எண்ணிக்கை 8,340-ஆக உயா்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.