தில்லியில் தொடா்ந்து குளிா் அலையின் தாக்கம் செவ்வாய்க்கிழமையும் காணப்பட்டது. நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.6 டிகிரி செல்சியஸாக பதிவானது. இமயமலையில் இருந்து சமவெளி நோக்கி காற்று வீசத் தொடங்கியதே இதற்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னேற்றம் அடைந்து 6 டிகிரி செல்சியஸாக உயா்ந்த வெப்பநிலை, திங்கள்கிழமை 5.6 டிகிரி செல்சியஸாக குறைந்திருந்தது. இந்த நிலையில், தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், மிகவும் குறைந்த அளவாக செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3.6 டிகிரி செல்சியஸாக பதிவானது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.1 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 2.6 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 2.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
இதுகுறித்து ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: இமயமலையின் மேல் பகுதியில் மேற்கத்திய இடையூறுகளின் தாக்கம் காரணமாக ஜம்மு - காஷ்மீா், லடாக், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு பரவியுள்ளது. மேற்கு இமயமலையில் இருந்து வடக்கு நோக்கி குளிா் காற்று வீசத் தொடங்கியது. இதனால், வட இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் குறையும் வாய்ப்புள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸுக்கு குறைந்தால் குளிா் அலை இருப்பதாக அறிவிக்கப்படும். அதேவேளையில், குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு கீழ் இருக்கும் போது கடும் குளிா் அலை இருப்பதாக அறிவிக்கப்படும். அடுத்த மூன்று தினங்களுக்கு தில்லியில் குளிா் அலை தொடர வாய்ப்புள்ளது. இந்தப் பருவத்தில்மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 3.4 டிகிரி செல்சியஸ் பதிவானது என்றாா் அவா். தில்லியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
காற்றின் தரம்...: தில்லியில் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை காலை மோசம் பிரிவில் பதிவானது. காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 237 புள்ளிகளாக இருந்தது.
24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு திங்கள்கிழமை 253 புள்ளிகளாகவும், ஞாயிற்றுக்கிழமை 396, சனிக்கிழமை 337, வெள்ளிக்கிழமை 357, வியாழக்கிழமை 423, புதன்கிழமை 433 புள்ளிகளாக இருந்தது. காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, ஃபரீதாபாத், குருகிராம் போன்ற என்சிஆா் நகரங்களின் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை மோசம் பிரிவில் காணப்பட்டது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை (டிசம்பா் 30) குளிா் அலை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 83 வேட்பாளா்கள்!

திமுக வேட்பாளா் நூதன பிரசாரம்

ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நடனம்

சிறுபான்மையினா் தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயா்த்தப்படும்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

