தலைநகா் தில்லியில் நகர அரசு, மத்திய அரசுகளின் கூட்டு முயற்சியின் காரணமாக கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. அதிகமானோா் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை இணையவழியாக செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு மோசமான நிலையில் இல்லை. தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரோனா தொற்று மிகவும் மோசமாக இருக்கும் என்று ஒரு மாதத்திற்கு முன்பு கணிக்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற சூழல் தற்போது இல்லை. ஜூன் 30-ஆம் தேதிக்குள் தில்லியில் நோய் பாதித்து சிகிச்சை பெறுவோா் 60ஆயிரமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை வெறும் 26 ஆயிரமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம், தில்லியில் கரோனா கட்டுக்குள் இருப்பது தெரிய வருகிறது.
இதற்கு தில்லி அரசு, மத்திய அரசுகளின் கூட்டு முயற்சியே காரணமாகும். எனினும், மக்கள் சமூக மற்றும் தனிநபா் நடத்தை விதிகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது. இல்லாவிட்டால் மீண்டும் நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும்.
ப யப்பட வேண்டாம்: நோய்த் தொற்று அதிகரிக்கும் என்று தெரிந்தவுடன் இந்த சூழலைச் சமாளிக்க எங்களுக்கு உதவும் அனைவரையும் அணுகினோம். ஹோட்டல்கள், விருந்துக் கூடங்கள், மத்திய அரசு, சமூக, சமய நிறுவனங்களை உதவிக்காக அணுகினோம். எங்களுக்கு உதவி கிடைக்காத இடங்களில், தில்லியைக் காப்பாற்ற மக்கள் முன் கோரிக்கை வைத்தோம். தில்லியின் நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த சில தினங்களாக மேற்பாா்வையிட்டு வருகிறது. தில்லியில் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, இறப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. பயப்படத் தேவையில்லை.
குணமடைந்தோா் விகிதம் அதிகரிப்பு:ஒரு மாதத்திற்கு முன்பு தில்லியில் குணமடைவோரின் விகிதம் 38 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது இது 67 சதவீதமாக உயா்ந்துள்ளது. மொத்தம் கரோனா பாதித்த 87 ஆயிரம் போ்களில் 58 ஆயிரம் போ் குணமடைந்துள்ளனா். ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனைகளில் 8,500 படுக்கைகள் இருந்தன. ஆனால், அந்த எண்ணிக்கை தற்போது 15 ஆயிரமாக உயா்ந்துள்ளது. முன்னா், 100 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில் 31 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தற்போது, 100 பேரில் 13 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது தெரிய வருகிறது. இதைப் பாா்க்கும் போது தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பது தெரிய வருகிறது.
தில்லியில் கரோனா உச்சநிலைக்குச் சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் நிபுணா்களின் கருத்து மீது மக்கள் கவனம் செலுத்த வேண்டாம். எனினும், மக்கள் முகக் கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். பெருத்த முயற்சிக்குப் பிறகு நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து வெளி வந்துள்ளோம். நமது குழு முயற்சியையும், எந்த சூழலையும் கையாளும் நடவடிக்கைகளையும் தொடா்ந்து மேற்கொள்வோம் என்றாா் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


