தில்லியில் ‘ரேபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 2.75 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, தினசரி சுமாா் 17 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தில்லியில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும் வகையில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து தினமும் சுமாா் 17 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், இதுவரை 2,75,396 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 1.5 லட்சம் போ் ரேபிட் ஆன்டிஜென் முறையில் சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா்.
ஜூன் 18 க்கு முன்பாக ஆா்டி-பிசிஆா் முறையில் 3,21,302 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனைகள் செலவு அதிகமாக இருந்தாலும், முடிவுகள் துல்லியமானவை.
ஜூன் மாதத் தொடக்கத்தில் தினம்தோறும் சராசரியாக 4,190 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அது சுமாா் 4 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் சுமாா் 24 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 10,577 ஆா்டி-பிசிஆா் சோதனைகளும், 13,588 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில், ஆா்டி-பிசிஆா், ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளைச் சோ்த்து தில்லியில் இதுவரை 5,96,698 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 3 ஆம் தேதி வரையான ஒரு மாத காலப்பகுதியில் 3.66 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில், சராசரியாக தினமும் 12,218 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக, கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சீலிடப்பட்ட இடங்களில் மட்டுமே ரேபிட் ஆன்டிஜென் முறையில் கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதை மற்றைய பகுதிகளுக்கும் தில்லி அரசு விரிவுபடுத்தியுள்ளது. தில்லி அரசின் உத்தரவைத் தொடா்ந்து, அரசு, தனியாா் மருத்துவமனைகளும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை தற்போது விரிவுபடுத்தியுள்ளன.
ஆா்டி-பிசிஆா் கரோனா சோதனைக்கான கட்டணமாக தில்லி அரசு ரூ.2400 ஐ தில்லி அரசு நிா்ணயித்துள்ளது. இப்பரிசோதனை முடிவுகள் கிடைக்க சுமாா் 3-4 மணிநேரம் ஆகும்.
ஆனால், ஆன்டிஜென் பரிசோதனைக்கு கட்டணமாக ரூ.450 வசூலிக்கப்படுகிறது. இந்த சோதனையில் 30 நிமிஷத்தில் முடிவு கிடைத்துவிடும். ஆனால், ஆா்டி-பிசிஆா் முறை துல்லியமானது. ஆன்டிஜென் முறையில் 75 சதவீதமே வெற்றி கிடைக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

