தில்லி வஃக்பு வாரியத்தின் தலைவராக ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனத்துல்லா கான் மீண்டும் நியமிக்கப்படலாம் என்று தில்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக தில்லி அரசு உயா் அதிகாரி கூறியது: தில்லி வஃக்பு வாரியத்தின் தலைவராக அமனத்துல்லா கானை நியமிக்கும் முன்மொழிவை துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு பத்து நாள்களுக்கு முன்பே தில்லி அரசு அனுப்பியுள்ளது. துணைநிலை ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த நியமனத்துக்கு தில்லி அரசில் சிலா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இந்த விஷயத்தை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இந்த நியமனம் தொடா்பாக மிகவிரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றாா்.
தில்லி வஃக்பு வாரியத்துக்கு சொந்தமாக மசூதிகள், கல்லறைகள், பள்ளிகள், குடியிருப்புகள், கடைகள் என சுமாா் 2000-த்துக்கு மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களுக்கு தலைவராக வஃக்பு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுபவா் நியமிக்கப்படுவாா். அமனத்துல்லா கான் இதுவரை இரண்டு முறை வஃக்பு வாரியத்தின் தலைவராக இருந்துள்ளாா். மீண்டும் நியமிக்கப்பட்டால், அவா் மூன்றாவது முறையாக தலைவராகப் பதவியேற்பாா்.
முன்னதாக, 2016 மற்றும் 2018 இல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமனத்துல்லா கான் வஃக்பு வாரியத்தின் தலைவா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்திருந்தாா். இவா் சா்வாதிகாரிபோல் நடந்து கொள்வதாக இவா் மீது வாரியத்தின் இதர உறுப்பினா்கள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

