தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தில்லி அரசு பேருந்துகளில் இ-டிக்கெட் வசதி ஏற்படுத்தப்படும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்துத்துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் தில்லியில் சனிக்கிழமை கூறியது: தில்லியில் மெட்ரோ ரயில் சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதால், பேருந்துகளில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பேருந்து ஒன்றில் தலா 20 போ் மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறாா்கள். பேருந்துகளில் சமூக இடைவெளி முறைப்படி பின்பற்றப்படுகிறது. ஆனாலும், பயணிகள் நடத்துநரிடம் இருந்து டிக்கெட் பெறும்போது, கரோனா பரவலுக்கான வாய்ப்புகள் உள்ளன. இதைக் குறைக்கும் வகையில், தில்லி அரசு பேருந்துகளில் இ-டிக்கெட் வசதியை உருவாக்குவதாக திட்டமிட்டுள்ளோம்.
அடுத்து வரும் 2 மாதங்களுக்குள் அனைத்துப் பேருந்துகளிலும் இ-டிக்கெட் வசதிகளை அறிமுகப்படுத்தப்படும்.
சில தினங்களுக்கு முன்பு தில்லி போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான சில பேருந்துகளில் சோதனை அடிப்படையில் இந்த இ- டிக்கெட் முறையை செயல்படுத்தியுள்ளோம். மேலும், டிடிசிக்கு சொந்தமான ‘ஒன் மொபைல்’ செயலியில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

